கடைசியில் ஆபத்து வந்தால்'... லேசர் தான் நம்மை காப்பாற்ற போகிறதாம்..!


எண்ணில் அடங்காத அறிவியல் புனைக்கதை புத்தகங்கள் தொடங்கி திரைப்படம், டிவி நிகழ்சிகள், ரேடியோ நிகழ்சிகள் என எதுவாக இருப்பினும் சரி ஏலியன்கள் பூமியை கண்டுப்பிடித்தால் என்னவாகும் என்ற முடிவு மட்டும் ஒன்றே ஒன்று தான். அது அழிவு..!

கேட்பதற்கு நகைப்பாக இருக்கும் பல கதைகள் நிஜத்தில் நடக்கும் போதும் நகைப்பாக இருக்குமா என்பது கேள்விகுறி தான். அப்படிதான் ஏலியன் இன்வேஷன் எனப்படும் அன்னிய படையெடுப்பும். நிகழும் போதுதான் பல உண்மைகள் விளங்கும்..!9

ஒருமித்த கருத்து :

ஏலியன் தேடல் அல்லது ஏலியன் இன்வேஷன் என எதுவாகினும் சரி, "அவைகளை விட்டு நாம் விலகி இருப்பதே நம்மக்கு நல்லது" என்பது தான் பல ஆராச்சியாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.

சாத்தியம் :

சாத்தியம் :

அதை ஏற்றுக்கொண்டு மனித இனமானது ஏலியன்களை தேடாமல் இருக்கலாம் ஆனால் ஏலியன்கள் நம்மை தேடாமல் இருக்கும் என்பதற்கு என்ன சாத்தியம்..?? என்ற கேள்வி எழுகிற பொது கிடைத்த விடை தான் - லேசர் தொழில்நுட்பம்..!

புதிய ஆய்வு :

புதிய ஆய்வு :

பூமி கிரகத்தின் அருகாமை நட்சதிரங்களின் மீது லேசர்களை பாய்ச்சிவதின் மூலம் பூமி கிரகமா ஆனது ஆக்ரோஷ எண்ணத்தோடு உள்ள ஏலியன் இனத்தவரிடம் இருந்து பூமியை மறைக்கும் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

எதிர் உள்ளுணர்வு :

எதிர் உள்ளுணர்வு :

விண்வெளியில் லேசர்களை பாய்ச்சுவதால் ஏலியன்கள் நம்மை எளிதில் கண்டுப்பிடிக்கூடுமே..? போன்ற பல வகையான எதிர் உள்ளுணர்வுகள் தோன்றினாலும் ஏலியன்கள் நம்மை எப்படியெல்லாம் அடையும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் பூமி பாதுகாப்பில் இது ஒரு சிறப்பான வழிமுறையாகும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

மங்கலான நிலை :

மங்கலான நிலை :

பூமி, சூரியனை சுற்றும்போது நட்சத்திரத்துடன் இருந்து விலகும், அப்போது சிறிய அளவிலான ஒளியை மங்கலடைய செய்யும், ஒருவேளை ஏலியன்கள் நம்மை தேடினால் அதவும் லட்சக்கணக்கான நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு தேடினால் பெரிய அளவில் மங்கலான நிலை ஏற்படும். அதை தான் டிரான்ஸ்சிட் (Transit)என்பார்கள்.

வளிமண்டல ஆதாரங்கள் :

வளிமண்டல ஆதாரங்கள் :

டிரான்சிட் முறையை அடித்தளமாய் கொண்டு அருகாமை நட்சத்திரங்கள் மீது பலமான லேசர் பாய்ச்சுவதால் ஒரு கிரகம் அங்கு இல்லாதது போலவும், அல்லது வளிமண்டல ஆதாரங்கள் இல்லாதது போலவும் காட்டிக்கொள்ள முடியும் என்கிறார் இந்த யோசனை முன்மொழிந்த வானவியலாளர் அலெக்ஸ் டீச்சே (Alex Teachey)

காணமல் போய்விட்டது :

காணமல் போய்விட்டது :

அதாவது பூமி கிரகத்தை ஒரு இறந்து போன கிரகம் போல காட்டும் என்கிறார் அலெக்ஸ் டீச்சே, ஒருவேளை ஏற்கனவே ஏலியன்கள் பூமியை கண்டறிந்திருந்தால் காணமல் போய்விட்டது போன்றும், மேற்கொண்டு சிக்னல்கள் பெறப் பட முடியாதது போலவும் செய்து விடும் என்றும் விளக்கம் அளிக்கிறார் அலெக்ஸ் டீச்சே.

விபரீதமான செயல் :

விபரீதமான செயல் :

கற்பனைக்கு அடங்காத அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் வேற்றுகிரக வாசிகளுடனான நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பானது மிகவும் விபரீதமான செயல் என்று ஸ்டீபன் ஹோக்கிங் எப்போதும் கூறுவார், அதையேதான் அலெக்ஸ் டீச்சே வும் கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

How to prepare your PC for the Windows 10 upgrade Source: WC

Top 5 Japanese Anime (Cartoons)

TOP FREE ANTIVIRUS