மீண்டும் மீண்டும் உங்களை யோசிக்க தூண்டும் 'அப்பட்டமான' உண்மைகள்..!

சிறிய சிறிய விடயங்களின் மீது போதுமான கவனம் செலுத்தாத வரையில் அது சார்ந்த பெரிய பெரிய உன்மைகளை நம்மால் அறிந்துகொள்ளவே முடியாது. சில சின்னச்சின்ன விடயங்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும் இருப்பினும் கூட அதில் உள்ளடக்கமாய் இருக்கும் சில உண்மைகள் பற்றி தெரிந்துகொள்ளும் போது "அட... நிஜமாகவா..?" என்ற ஆச்சரியம் கிளம்பத்தான் செய்கிறது.

அப்படியாக, மீண்டும் மீண்டும் உங்களை யோசிக்க தூண்டும் 'அப்பட்டமான' அறிவியல் உண்மைகள் பற்றிய தொகுப்பே இது..!

நாம் உண்ணும் அனைத்துமே சூரிய ஒளியால் பதப்படுத்தப்பட்ட ஒன்றாகும்..!

பூமியில் இருந்து சுமார் 65 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் பூமி போன்றே கிரகம் ஒன்று இருந்தால் அங்கு டைனோசர்கள் இருக்கலாம்.

சரியாக ஜூலை 20 ஆம் தேதி, 1969 ஆம் ஆண்டு நிலவிற்கு ஏலியன்கள் நுழைந்தனர், அதாவது வேற்று கிரகம் சென்றால் மனிதர்களும் வேற்றுகிரகவாசிகள் தான்..!

பூமியின் 71% மேற்பரப்பும் கடல் தான் என்கிற போதிலும் மனித கண்களால் காணப்பட்ட கடலின் அளவு வெறும் 5% மட்டுமே..!

பூமியின் மக்கள் தொகை மொத்தம் 7 பில்லியன் ஆகும். இதில் ஒவ்வொருவருக்குள்ளும் சுமார் 7 அக்டோலியன் அணுக்கள் உள்ளடங்கியுள்ளது.

நாம் வாழும் பிரபஞ்சத்திற்கு எல்லையே கிடையாது. மீறி இருந்தாலும் அதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

நீங்கள் சூரிய உதயத்தை காணும் அதே நேரம் வேறொருவர் சூரிய அஸ்தமனத்தை கண்டுக்கொண்டிருப்பார்.!

விண்வெளியில் இருக்கும் எல்லா நட்சத்திரங்களும் ஒரே வயது கொண்டவைகள் அல்ல. சில நட்சத்திரங்கள் உருவாகி மில்லியன் ஆண்டுகள் ஆகலாம், இன்னும் சில பில்லியன் ஆண்டுகள். இரவு பொழுதில் அவைகள் எல்லாமுமே நம் கண்களுக்கு ஒரே நேரத்தில் நிகழ்வது போல் தோன்றினாலும் கூட அது விண்வெளியின் ஒரு பில்லியன் ஆண்டுகள் அளவிலான இணைப்பு பணியாகும்..!

Comments

Popular posts from this blog

How to prepare your PC for the Windows 10 upgrade Source: WC

Top 5 Japanese Anime (Cartoons)

Salesforce LWC - Mass Approval Component